2024 மக்களவைத் தேர்தலுக்கு உருவாக்கப்படும் புதிய எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸுக்கு இடமில்லை: அகிலேஷ் யாதவ் சூசகம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: புதிய எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸுக்கு இடமில்லை என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் சூசகமாக தெரிவித்தார்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்யாதவ், சமீபத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தாவை கொல்கத்தாவில் சந்தித்து பேசினார். காங்கிரஸ் இன்றி புதிய எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க அவர் சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில் டெல்லியில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

ரே பரேலி தொகுதியிலும்..

காங்கிரஸ் தேசிய கட்சி. நாங்கள் மாநில கட்சிகள். மிக பழமையான கட்சியான காங்கிரஸ், தனது செயல்பாடு குறித்து முடிவு செய்ய வேண்டும். அமேதி தொகுதியில், இந்த முறை மக்க ளவை தேர்தலில் சமாஜ்வாதி போட்டியிடும். சோனியா காந்தியின் ரே பரேலி தொகுதியிலும் நாங்கள் போட்டியிடுவோம்.

சமீபத்தில் நான் அமேதி சென்றி ருந்தேன். இந்த தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற எங்கள் கட்சி உதவியது. ஆனால் சமாஜ்வாதி தொண்டர்களுக்கு அநீதிஇழைக்கப்பட்டபோது, காங்கிரஸ்வாய் திறக்கவில்லை. அமேதிமற்றும் ரேபரேலி தொகுதிகளில்,சமாஜ்வாதி கட்சி போட்டியிடவேண்டும் என எங்கள் தலைவர்கள் கூறுகின்றனர்.

புதிய எதிர்க்கட்சி கூட்டணியின் விதிமுறைகளை நாங்கள் வெளியிட மாட்டோம். எங்கள்நோக்கம் பாஜக.,வை எதிர்ப்பதுதான். பாஜக.,வை யார் எதிர்த்தாலும், அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை அனுப்பப்படுகிறது. பாஜக.,வுடன் கூட்டு சேரும் கட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மத்திய விசாரணை அமைப்புகளை, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாக பயன்படுத்தியதால், காங்கிரஸ் வீழ்ந்தது. அதுபோல் வரும் காலத்தில் பாஜக.வும் அரசியல் ரீதியாக வீழ்ச்சியடையும்.

ஜாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இல்லையென்றால் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது. ஜாதீரீதியான கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி கிடைக்காது. அதனால் ஜாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். பல தலைவர்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர். ஆனால், காங்கிரஸ்போலவே, பாஜக.வுக்கும் இந்த கணக் கெடுப்பை நடத்த ஆர்வம் இல்லை. இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.

சாத்தியமில்லை: ஜெய்ராம் ரமேஷ் திட்டவட்டம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:

அடுத்த 2024-ல் பொதுத் தேர்தலைசந்திக்கவுள்ள நிலையில், கூட்டணி குறித்து முன்னதாகவே எந்த கருத்தையும் உறுதியாக கூறிவிட முடியாது.

எனினும், பாஜகவை எதிர்கொள்ள எதிர்க் கட்சிகள் அமைக்கும் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி கூட்டணி அமைவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. தேர்தலுக்கு முன்பாக, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது கூட்டணி என்ற பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இருக்கும். அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை.

2024 பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தேவையான வியூகங்களை வகுக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள்தான் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளையும் முடிவு செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்