பாலியல் வன்கொடுமை குறித்து கருத்து - ராகுல் காந்திக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

டெல்லி: பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்ரீநகரில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையின் போது, “பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்” என ராகுல் காந்தி தெரிவித்தார் என்றும், "பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக உங்களை அணுகிய பெண்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும், இதனால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும்" என்றும் டெல்லி காவல்துறை ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு தொடர்பாக அவர் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டுவரும் நிலையில், ராகுல் காந்திக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்