ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டம் - ஆளும் கட்சி எம்எல்ஏ உட்பட 13 பேர் சஸ்பெண்ட்

By என்.மகேஷ்குமார்


அமராவதி: ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் 12 எம்எல்ஏக்களை சபாநாயகர் நேற்று சஸ்பெண்ட் செய்தார்.

ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் அமராவதியில் நடைபெற்று வருகிறது. இதன் 2-ம் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அவை நடைபெறாதவாறு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த கேசவ், நிம்மல ராமாநாயுடு, ஆளும் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ கோடம்ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி ஆகிய 3 பேரை பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்வதாக சபா நாயகர் தம்மிநேனி சீதாராம் அறிவித்தார்.

இதற்கு தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் 10 பேரை ஒருநாள் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறி
வித்தார். இதையடுத்து 13 எம்எல்ஏக்களும் அவையை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஆளும் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏவான ஸ்ரீதர் ரெட்டி தனது தொகுதி பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி சபாநாயர் இருக்கைக்கு அருகில் நின்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். தெலுங்கு தேசம் எம்எல்ஏவான கேசவ் ஒரு விவாதத்தில் பங்கேற்க தனக்கு மைக் தரப்பட வேண்டும் என இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE