புதுடெல்லி: பாஜக ஆட்சி இல்லாத ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சல் ஆகிய மாநில அரசுகள், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) செயல்படுத்த திட்டுமிட்டுள்ளன. இந்நிலையில், தேசிய பென்ஷன் திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் அமைக்கப்பட்டு உள்ள பென்ஷன் நிதியில் உள்ள மாநில அரசின் பங்களிப்புகளை திருப்பித் தர வேண்டும் என்று மத்திய அரசிடம் ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் இதுதொடர்பான கேள்வி மாநிலங்களவையில் எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அமைச்சர் பகவத் காரத் எழுத்து மூலம் அளித்த பதில்: தேசிய பென்ஷன் திட்டம் (என்பிஎஸ்) கடந்த 2003-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பென்ஷன் நிதியம் ஏற்படுத்தப்பட்டு நிதி தொகுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பழைய பென் ஷன் திட்டத்துக்குத் திரும்ப நினைக்கும் 5 மாநிலங்கள் மாநிலத்தின் பங்கை திரும்ப அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளன. ஆனால் பென்ஷன் நிதி ஒழுங்கமைப்பு மற்றும் மேம்பாட்டு ஆணைய (பிஎஃப்ஆர்டிஏ) சட்டம், 2013-ன் கீழ் மாநிலங்களுக்கு பென்ஷன் நிதியைத் திருப்பித் தருவதற்கு இடமில்லை. மேலும் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் எந்தப் பரிசீலனையும் இல்லை. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago