முல்லைப் பெரியாறு அணை நீரின் அளவை 142 அடியாக உயர்த்த அனுமதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கேரள அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த 2006-ம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மீறி, அதே ஆண்டு மார்ச் 18-ம் தேதி கேரள சட்டசபையில், முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச உயரத்தை 136 அடியாக நிர்ணயித்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து, சந்திரமவுலி பிரசாத், மதன் லோக்கூர், எம்.ஒய்.இக்பால் அடங்கிய அமர்வு கேரள அரசின் சட்டத்தை ரத்து செய்தது. நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதித்ததுடன், அணை நிர்வாகத்தை ஏற்க மூன்று பேர் கொண்ட குழுவையும் அமைத்து கடந்த மே 7-ம் தேதி உத்தரவிடப்பட்டது.
மூவர் குழு அமைக்கும் பணிகள் நடந்துவரும் நிலையில், கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மனுவில் கூறியிருப்பதாவது:
முல்லைப் பெரியாறு அணை மீது 1886-ஆம் ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் தமிழகம் உரிமை கோருகிறது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், இந்திய கூட்டாட்சி அமைப்பு உருவாக்க சட்டம் இயற்றப்பட்டது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிப்பு ஆகியவற்றின் மூலம், ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது. உரிமை கோரும் அடிப்படை பிரிவுகளும், தமிழகம் குத்தகைதாரராக தற்போதும் நீடிக்கிறதா என்பதுமே கேள்விக்குரிய விஷயம். இதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.
கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த ஒருங்கிணைப்புக் குழு விவரங்கள் கேரள அரசுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்துக்கு தவறான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. தவறான தகவல்களை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அணையின் கீழ் பகுதியில் வாழும் மக்களின் பாதுகாப்பும் தீர்ப்பு வழங்கும் முன் கருத்தில் கொள்ளப்படவில்லை. எனவே, இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
34 mins ago
இந்தியா
39 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago