புதுடெல்லி: "2023-24ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13-ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்க இருக்கிறது. முதல் கூட்டத்தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று கூடியது. இரண்டாவது நாளான இன்றும் கூட்டத்தொடர் நடைபெற்றது.
2023-24ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கேட்டகப்பட்ட கேள்விக்கு, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்த பதில்: 2023-24ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக பணிக்கான தேவையின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு நிதி அளிக்கிறது. பணிக்களுக்கான நிதித் தேவையின் போது நிதி அமைச்சகத்திடமிருந்து ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கூடுதல் நிதி கோருகிறது" என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago