மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க தொழில்நுட்பத்தை நீதித்துறை பயன்படுத்த வேண்டும் - தலைமை நீதிபதி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் 18-வது கூட்டம் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் ‘‘ஸ்மார்ட் நீதிமன்றங் கள் மற்றும் நீதித்துறையின் எதிர் காலம்’’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: நீதித்துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்தியாவில் இ-நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன.

இதனால் நீதித்துறை திறம்படவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பணிகள், தேவையான டிஜிட்டல் கட்டமைப்புகளை உருவாக்கின. மூன்றாம் கட்ட பணி, நடைமுறைகளை எளிதாக்கி, நீதித்துறை சேவைகளை மக்களை சென்றடைவதை அதிகரிக்கும்.

நீதி என்பது அத்தியாவசிய சேவை என்பதற்கு ஏற்றார் போல் ஸ்மார்ட் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும். மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் சரியான நேரத்தில் நீதி கிடைப்பதை நீதித்துறை உறுதி செய்ய வேண்டும். இதை கருத்தில் கொண்டு மக்களுக்கும், நீதித் துறைக்குமான இடைவெளியை குறைக்க நாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். கரோனா பெருந்தொற்று காலத்தில் டிஜிட்டல் பயன்பாடு நன்கு உணரப்பட்டது. இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்