திருப்பதி அருகே சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

திருப்பதி: திருப்பதி அருகே நேற்று காலை டேங்கர் லாரி எதிரே வந்த 2 கார்கள் மீது மோதியதில் லாரி ஓட்டுனர் உட்பட மொத்தம் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பதியிலிருந்து சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்த டேங்கர் லாரி நகரி அருகே உள்ள தர்மபுரம் எனும் இடத்தில் வந்தபோது, திடீரென நிலை இழந்து எதிரே வந்த 2 கார்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒவ்வொரு காரிலும் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி ஓட்டுனர் லாரியை விட்டு கீழே குதித்தபோது, லாரியின் டயர்கள் அவர் மீது ஏறியது. இதனால் அவரும் அதே இடத்தில் பலியானார். பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இது தொடர்பாக நகரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்