நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடக்கம்: 35 மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ம்தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி முடிவடைந்தது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கி, ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பட்ஜெட் குறித்து விவாதம் நடத்தப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். இதனிடையே, 35 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அதானி குழுமம்மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை, பணவீக்கம் உயர்வு, சமையல் காஸ் விலை உயர்வு, வேலையின்மை விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதேநேரம், பிரிட்டன் சென்றிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது குறித்து பிரச்சினை எழுப்ப ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், குடியரசு துணைத்தலைவரும் மாநிலங் களவைத் தலைவருமான ஜெகதீப்தன்கர் தலைமையில் நேற்றுஅனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்அவையை சுமுகமாக நடத்தஒத்துழைப்பு தருமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இப்போதைய நிலவரப்படி மாநிலங்களவையில் 26, மக்களவையில் 9 என மொத்தம் 35 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

மேலும்