இந்தியா, பிரதமர் மோடி பற்றி பொய்களை பரப்பி வருகிறது நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் - அனுராக் தாக்குர் கண்டனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் பற்றி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரை குறும்புத்தனமானது, கற்பனையானது.

இந்தியா மற்றும் அதன் ஜனநாயக அமைப்புகள்மற்றும் மதிப்புகள் பற்றி தவறானகருத்தை பரப்பும் ஒரே நோக்கத்துடன் இது வெளியிடப்படுகிறது. நியூயார்க் டைம்ஸ் மற்றும் இதுபோன்ற சில வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியா பற்றியும், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி பற்றியும் தொடர்ந்து பொய்களை பரப்புகின்றன.

இது போன்ற பொய்கள் நீண்ட காலம் நீடிக்க முடியாது. காஷ்மீரில் உள்ள பத்திரிகை சுதந்திரம் குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் அப்பட்டமான பொய்களை பரப்பியுள்ளது கண்டனத்துக்கு உரியது.

இந்திய மண்ணில் தங்களின் கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் என்ற மனநிலை உடையவர்களை இந்தியர்கள் அனுமதிக்கமாட்டார்கள். இவ்வாறு அனுராக் தாக்குர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

51 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்