புதுடெல்லி: பஞ்சாப் அருகே உள்ள இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் (பிஎஸ்எஃப்) வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக பிஎஸ்எஃப் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எல்லைப்பாதுகாப்புப்படை செய்திதொடர்பாளர் கூறுகையில், "அந்த ஊடுருவல்காரர் நேற்று நள்ளிரவிலில் இருந்து இன்று அதிகாலைக்குள் முன்பக்க எல்லையைக் கடந்து பஞ்சாப் மாவட்டத்தின் பெரோஷ்பூர் செக்டார் பகுதியில் உள்ள "திரத்" என்ற பகுதியின் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் ஊடுருவிய நபர் பாகிஸ்தானில் உள்ள கைபர் பகுதியில் வசிப்பவர் என்று தெரியவந்துள்ளது. அவரிடம் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அதிகாரிகளின் கூட்டுக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் அவர் உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்படலாம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, இதே பஞ்சாப் எல்லையில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
56 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago