முன்னாள் அமைச்சரின் மகன் அடித்துக் கொலை

வாகனம் திருடப்போன இடத் தில் 2 திருடர்களுக்கு மக்கள் தர்ம அடி கொடுத்ததில் ஒருவர் உயிரிழந்தார். அவர் முன்னாள் அமைச்சரின் மகன் ஆவார். இந்தச் சம்பவம் பிஹார் மாநிலத்தில் நடந்துள்ளது.

பிஹார் மாநிலத்தில் ராஷ்டிரீய ஜனதா தளக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருந்தவர் ரமாஷ்ரே சாஹ்னி. இவருக்கு ராஜீவ் என்றொரு மகன் உண்டு. ராஜீவ் மற்றும் அவரது நண்பர் ராஜாராம் கேவத் ஆகிய இருவரும் சனிக்கிழமை இரவு சமஸ் திபூர் மாவட்டத்தில் உள்ள அசிம்சக் கிராமத்திற்கு வாகனம் ஒன்றைத் திருடச் சென்றனர்.

அப்போது அங்கிருந்த மக்கள் இவர்களைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதில் ராஜீவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் நண்பர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சுயநினைவின்றிக்கிடக்கிறார்.

இதுபற்றி காவல்துறை அதிகாரி பாபு ராம் கூறும்போது, "ராஜீவ் இதற்கு முன்பே இது போன்ற குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். வாகனங்கள் திருடும் கும்பல் ஒன்றுடன் இவர் தொடர்பில் இருந்தார்" என்றார். இதுகுறித்து முன்னாள் அமைச்சரிடம் கேட்டபோது, சடலத்தைப் பார்த்துவிட்டு அடையாளம் கண்ட பிறகுதான் என் கருத்தைச் சொல்ல முடியும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE