அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை இரு நாட்டு பிரதமர்களும் பார்வையிட்டு வருகின்றனர்.
அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று(மார்ச் 9) தொடங்கியுள்ளது. இந்த போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனிஸ்-ம் தற்போது பார்வையிட்டு வருகின்றனர்.
இரு நாடுகளும் இணைந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியுள்ளதை நினைவுகூறும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றே அகமதாபாத் நகருக்கு வருகை தந்தார். ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனிஸ்-ம் நேற்றே அகமதாபாத்துக்கு வருகை தந்தார்.
» ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை அடுத்து போருக்கு தயாராகும் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல்
» பெண்களுக்கு மேலும் அதிகாரம் - மகளிர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
இன்று காலை 8.45 மணி அளவில் நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகை தந்தார். இதையடுத்து மைதானத்துக்கு வருகை தந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனிஸ்-ஐ, பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், இருவரும் மைதானத்திற்குள் சென்றனர். அங்கு அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வாகனத்தில் நின்றவாறு இருவரும் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியின் தொடக்க ஆட்டத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago