புதுடெல்லி: நாட்டின் நலனுக்காக ஒரு நாள் தியானத்தை கடைபிடிப்பதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இந்த நிலையில், ஹோலி கொண்டாட்டத்தை தவிர்த்த அவர் நேற்று காலை 10 மணிக்கு தனது 7 மணி நேர தியானத்தை தொடங்கினார். அதற்கு முன்பாக, ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதுதொடர்பாக கேஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டின் முன்னேற்றம் கருதி நேற்று ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை தவிர்த்து தியானத்தில் ஈடுபட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்.படம்: பிடிஐமக்களுக்கு நல்ல கல்வி மற்றும் சிறப்பான சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் போன்ற நல்ல தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் பிரதமர் நாட்டை கொள்ளையடிப்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.
எனவே, நாட்டின் நலனுக்காக வும், முன்னேற்றத்துக்காகவும் தியானத்தின் மூலம் பிரார்த்தனை செய்கிறேன். பிரதமர் செய்வது தவறு என்பதை நீங்களும் உணர்ந்தால்; நாட்டைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், ஹோலி கொண்டாடிய பிறகு தேசத்திற்காக பிரார்த்தனை செய்ய நீங்களும் நேரம் ஒதுக்குங்கள் என மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கேஜ்ரிவால் தியானம் செய்யும் படத்தை ஆம்ஆத்மி கட்சி ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago