தெலுங்கு தேசம் ஆட்சி அமைய பவன் கல்யாண்தான் காரணம்: எம்எல்ஏ ரோஜா பேச்சு

ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் செய்த தேர்தல் பிரச்சாரத் தினால்தான், ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சி அமைத் தது என நகரி தொகுதியின் எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா கூறினார்.

சித்தூர் மாவட்டம் புத்தூர் அரசு மருத்துவமனையில் ரோஜா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு தனது தேர்தல் வாக் குறுதியை முழுமையாக நிறை வேற்றவில்லை. கண் துடைப்பு நாடகமாக விவசாயிகளின் வங்கி கடனை குறைந்த அளவே ரத்து செய்துள்ளார். ஆனால் இவர், தேர்தலுக்கு முன், முழு கடனையும் ரத்து செய்வதாக கூறி மக்களிடம் வாக்குகளை பெற்று, தற்போது மக்களையே ஏமாற்றுகிறார்.

ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் செய்த தீவிர பிரச்சாரத்தினால் தான் தெலுங்கு தேசம் ஆட்சியை பிடித்தது.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை விட, வெறும் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில்தான் சந்திரபாபு முதல்வராக பதவி வகிக்கிறார்.

விவசாயிகளின் பிரச்சினை களுக்காக போராடுவது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தான் என்றார் ரோஜா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE