இந்தியாவில் பரவுவது இன்ஃப்ளூயன்ஸா ஏ வகை வைரஸ் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நேற்று முன்தினம் வெளியிட்ட வழிகாட்டு நெறிகளில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள ஐசிஎம்ஆரின் 30 ஆய்வகங்களில் நோயாளிகளின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் இந்தியாவில் பரவுவது இன்ஃப்ளூயன்ஸா ஏ எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த டிசம்பர் 15 முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த வகை வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்ஃப்ளூயன்ஸா ஏ எச்3என்2 வகை வைரஸால் பாதிக்கப் படுவோருக்கு நுரையீரல் தொற்று ஏற்படுகிறது. நோயாளிகளில் 10 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படுகிறது. 7 சதவீதம் பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க அடிக்கடி சோப்புபோட்டு கைகளை கழுவ வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். கழுவாத கைகளால் கண்களையோ, மூக்கையோ தொடக்கூடாது. அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். காய்ச்சல், உடல் வலி அதிகமாக இருந்தால் மருத்துவரின் அறிவுரைப்படி பாராசிட்டமால் மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.

பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. கைகுலுக்கியோ, கட்டித் தழுவியோ வாழ்த்து கூறக் கூடாது. கூட்டமான இடங்களுக்கு செல்லக் கூடாது. தனிமனித இடை
வெளியை கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவரின் அறிவுரை இன்றி மருந்துகளை உட்கொள்ள கூடாது. இவ்வாறு வழிகாட்டு நெறிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎம்ஏ அறிவுரை: இந்திய மருத்துவர்கள் கூட்ட மைப்பு (ஐஎம்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் இன்ஃப்ளூ யன்ஸா ஏ எச்3என்2 வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு இருமல், தொண்டை வலி, உடல் வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. காய்ச்சல் பாதிப்பு 7 நாட்கள் வரை நீடிக்கிறது. 50 வயதுக்கு மேற்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்ட சிறார் இந்த வகை வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசுவும் வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

பாக்டீரியா வகை காய்ச்சலா, வைரஸ் வகை காய்ச்சலா என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். லேசான காய்ச்சலுக்கு அடிக்கடி ‘ஆன்டி பயாடிக்' மருந்துகளை உட்கொள்வதால் கிருமிகளுக்கு ‘அன்டி பயாடிக்' மருந்துகளை எதிர்க்கும் ஆற்றல் உருவாகிவிடும். வைரஸ் பரவு
வதை தடுக்க அடிக்கடி கைகளை கழுவுவது உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இவ்வாறு ஐஎம்ஏ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக நாடுகளின் பருவநிலைக்கு ஏற்ப ஆண்டுதோறும் இன்ஃப்ளூ யன்ஸா வகை வைரஸ் பரவுகிறது. இந்த வகை வைரஸால் உலகம் முழுவதும் ஓராண்டுக்கு சுமார் 6.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 secs ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

1 day ago

மேலும்