புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் கஸ்பா பெத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரவிந்தர தன்கேகர் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஹேமந்த் ரசானேவை தோற்கடித்துள்ளார். 28 வருடங்களாக பாஜக ஆதிக்கம் செலுத்தி வந்த தொகுதியில் காங்கிரஸ் இந்த வெற்றியை ருசித்திருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் புனோவில் உள்ள கஸ்பா பெத் தொகுதியின் பாஜக எம்எல்ஏ முக்தா திலக், சின்ச்வாட் தொகுதி பாஜக எம்எல்ஏ லக்ஷ்மண் ஜக்தப் ஆகியோர் இறந்ததைத் தொடர்ந்து பிப்.26-ம் தேதி அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்குகள் எண்ணும் பணி இன்று (மார்ச்.2) காலை முதல் நடந்து வந்தது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) கூட்டணியான மகா விகாஸ் அகாடி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சிவசேனாவில் இருந்து கிளர்ச்சி எம்எல்ஏக்களுடன் பிரிந்த ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் இணைந்து ஆட்சியை அமைத்தார். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா அரசியலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. சிவ சேனா பிளவு பாஜக ஆட்சி ஏற்பட்டவுடன் நடைபெற்ற இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
தங்களது பலத்தை நிரூபிக்க ஷிண்டை அணியும், உத்தவ் தாக்கரே அணியும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டன. இந்த நிலையில், ஆளும் பாஜகவின் கோட்டையாக இருந்து வந்த கஸ்பா பெத் தொகுதியை காங்கிரஸ் கைபற்றி இருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. கடந்த 1995-ம் ஆண்டு முதல், சுமார் 28 ஆண்டுகளாக இந்த தொகுதியில் பாஜக ஆளுமை செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி குறித்து மகா விகாஸ் அகாடி தலைவரகள் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறுகையில், "எங்களுடைய வேட்பாளரைத் தேர்ந்தெடுத்த கஸ்பா பெத் தொகுதி மக்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். மகாராஷ்டிரா ஒரு முற்போக்கான மாநிலம் பாஜக அதன் கொள்கை பாஜக அழிக்கப்பார்க்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான, தேசியவ வாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியின் ரவீந்திர தன்கேகர் மிகவும் பொருத்தமான வேட்பாளர். ஸ்கூட்டரில் சென்று மக்களுக்காக சேவை செய்யும் அடிமட்ட ஊழியர் அவர். முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வர் தேவிந்திர பட்னாவிஸும் அவர்களின் முழு பலத்தையும் பயன்படுத்தினர். ஆனால், கஸ்பா பெத் தொகுதி இடைத்தேர்தல் வேறு வகையான பதிலைத் தந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சிவசேனாவின் (உத்தவ் அணி) எம்.பி.சஞ்சய் ராவத் கூறுகையில்,"வரும் 2024 தேர்தலில் ஏற்படப் போகும் மாற்றத்திற்கான முன்னறிவிப்பு இது. பாஜகவுக்கும் டெல்லியில் இருக்கும் அதன் தலைவர்களுக்கும் இதன் மூலம் யார் உண்மையான சிவசேனா என்பது புரிந்திருக்கும். இப்போதிலிருந்து பாஜகவின் கோட்டைகள் அனைத்தும் தகர்க்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
58 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago