Assembly Election Results | திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி; மேகாலயாவில் முந்தும் சங்மா கட்சி!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் மூன்று வடகிழக்கு மாநிலங்களில் நாகாலாந்து, திரிபுராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் சூழல் நிலவுகிறது. மேகாலயாவில் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) பெரும்பான்மையை நோக்கி முன்னேறி வருகிறது. பாஜகவின் துணையுடன் இங்கே மீண்டும் ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது.

திரிபுரா: தற்போதைய நிலவரப்படி, திரிபுராவில் பாஜக கூட்டணி 33 தொகுதிகளை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. சிபிஎம் - காங்கிரஸ் கூட்டணி 14 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. மாநிலக் கட்சியான ப்ரடோய்ட் மணிக்யா டெப்பர்மாவின் திப்ரா மோதா கட்சி 13 தொகுதிகளை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. கடந்த தேர்தல்: 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் தற்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. கடந்த தேர்தலில் இந்தக் கட்சி, திரிபுரா மக்கள் முன்னணி (IPFT) உடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. இதில், பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திரிபுரா மக்கள் முன்னணி 8 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறையும் இதே கூட்டணி தேர்தலை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

திரிபுரா வெற்றி / முன்னணி நிலவரம்:
பாஜக கூட்டணி - 33 | ( மைனஸ் 11)
காங். + இடது அணி - 14 | (மைனஸ் 2)
திரிபுரா மக்கள் முன்னணி - 13 | (ப்ளஸ் 13)
(ஆட்சியமைக்க தேவை 31 இடங்கள்)

நாகாலாந்து: தற்போதைய நிலவரப்படி, நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி - பாஜக கூட்டணி 37 தொகுதிகளை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. என்பிஎஃப் கட்சி 2 தொகுதியை கைப்பற்றும் நிலையில், காங்கிரஸ் தற்போது எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை. நாகாலாந்தின் அகுலுடோ தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றதால் பாஜக வேட்பாளர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தல்: மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில், தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி - பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்தத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்தது. இந்தத் தேர்தலில் 40:20 ஒப்பந்த்தின் அடிப்படையில் இருகட்சிகளும் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நாகாலாந்து வெற்றி / முன்னிலை நிலவரம்:
பாஜக - என்டிடிபி கூட்டணி - 37 (ப்ளஸ் 7)
என்பிஎஃப் - 2 (மைனஸ் 24)
காங். - 0 (0)
மற்றவை - 21 (ப்ளஸ் 17)
(ஆட்சியமைக்க தேவை 31 இடங்கள்)

மேகாலயா: 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மேகாலயாவில், சங்மாவின் ஆளும் தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. யுடிபி 11 இடங்களை வசப்படுத்தும் நிலையில் உள்ளது. இங்கு காங்கிரஸ் மற்றும் திரிணமூல் தலா 5 தொகுதிகளையும், பாஜக 2 தொகுதிகளையும் கைப்பற்றும் நிலையில் உள்ளன. இந்த மூன்று மாநிலங்களிலும் ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேகாலயா வெற்றி / முன்னிலை நிலவரம்:
என்பிபி - 26 (ப்ளஸ் 6)
யுடிபி - 11 (ப்ளஸ் 5)
காங். - 5 (மைனஸ் 16)
டிஎம்சி - 5 (ப்ளஸ் 5)
பாஜக - 2 (0)
மற்றவை - 10 (0)
(ஆட்சியமைக்க தேவை 31 இடங்கள்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE