3 ஆண்டுகளில் 245 யானைகளை இழந்த ஒடிசா மாநிலம்

By செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவையில் எம்எல்ஏ சவும்யா ரஞ்சன் பட்நாயக் எழுப்பிய கேள்விக்கு வனத்துறை அமைச்சர் பிரதீப் அமத் அளித்த பதில் வருமாறு: கடந்த 2019-20 முதல் 2021-22 வரையிலான 3 ஆண்டுகளில் 245 யானைகளை ஒடிசா இழந்துள்ளது. இதில் 6 யானைகள் வேட்டைக்காரர்களால் கொல்லப் பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளில் 43 வேட்டைக்காரர்கள் கைது செய்யப்பட்டு, 39 தந்தங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் பிரதீப் அமத் கூறினார்.

வனவிலங்கு ஆர்வலர்கள் கூறும்போது, “வேட்டைக்காரர் ஒருவரும் முறைகேட்டை அம்பலப்படுத்திய வரும் கொல்லப்பட்ட வழக்கில் 9 வன ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வனப் படையை மேலும் மதிப்பிழக்கச் செய்துள்ளது’’ என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்