அமராவதி: இந்து மத நம்பிக்கையை பாதுகாக்க 3,000 கோயில்கள் கட்டப்படும் என்று ஆந்திர அறநிலையத் துறை அமைச்சரும், துணை முதல்வருமான கோட்டு சத்திய நாராயணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கோவில் இருப்பதை உறுதி செய்ய மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். அவரது வழிகாட்டுதலின்பேரில், இந்து மத நம்பிக்கையை பாதுகாக்கவும், பரப்பவும் கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 3,000 கோயில்கள் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளை கோவில்கள் கட்டுவதற்காக தலா ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. 1,330 கோயில்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதுதவிர, மேலும் 1,465 கோயில்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு சில சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கையின் பேரில் மேலும்200 கோயில்கள் கட்டமைக்கப்படும். கோயில் கட்டும் திட்டம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago