நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றான லக்னோவில் உள்ள பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாலியல் அத்துமீறல்கள், அடக்குமுறைகள் நடந்துவருவதாகக் கூறி அங்கு பயிலும் மாணவிகளும் அவர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியதில் அந்த மாணவி மயங்கி விழுந்தார். இதனைக் கண்டித்து கடந்த இரண்டு நாட்களாக மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்டவந்த நிலையில் நேற்றிரவு (சனிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது தடியடி நடத்தப்படதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மாணவி ஒருவருக்கு தலையிலும் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சில மாணவிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
என்னதான் பிரச்சினை?
பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் அண்மைக்காலமாக பெண்களை ஈவ் டீஸிங் உள்ளிட்ட பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கும் சம்பவம் அதிகரித்துவிட்டது. இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் நிர்வாகத்தினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மாணவிகளின் புகார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் பிரச்சினை குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் 'தி இந்து' (ஆங்கில) நாளிதழுக்கு சில தகவல்களை அளித்துள்ளார்.
"இரண்டு நாட்களுக்கு முன்னதாக பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார். அந்த சம்பவத்துக்குப் பின்னர் அவர் மயங்கி விழுந்துள்ளார். இச்சம்பவத்தைக் கண்டித்து மாணவிகள் கடந்த இரண்டு நாட்களாகவே தர்ணாவில் ஈடுபட்டுவந்துள்ளனர். மாணவிகளுடன் துணை வேந்தர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தாவிட்டாலும் சில பிரதிநிதிகள் மூலம் போராடும் மாணவிகளிடம் சமரசம் பேசப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலையில் சில மாணவர்களும் மாணவிகளுக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் இறங்கினர். இவர்களில் சிலருக்கு அரசியல் பின்புலம் இருக்கிறது. ஆதரவுக்கரம் நீட்டிய மாணவர்கள் சிலர் இனி பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகள் பாதுகாப்பை தாங்கள் உறுதி செய்வதாக கூறினர். ஆனாலும் மாணவிகள் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். அப்போது, அடையாளம் தெரியாத யாரோ அங்கிருந்த வாகனத்துக்கு தீவைக்க போலீஸார் தடியடியில் ஈடுபட்டனர்" என்றார்.
போலீஸ் தடியடி குறித்து, மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் பெருமளவில் திரண்டதோடு போலீஸார் மீது கற்களை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர் என்றும் அதன் காரணமாகவே போலீஸார் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகைக்குண்டும் வீசியதாக பல்கலைக்கழகத் தரப்பில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறியுள்ளார்.
சில மாதங்களாகவே கொந்தளிப்பில் மாணவிகள்..
பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நடைபெற்றுவந்த பாலியல் அத்துமீறல்கள், மாணவர்கள் மீதான தாக்குதல்கள், அடக்குமுறைகளால் கடந்த சில மாதங்களாகவே பல்கலைக்கழக மாணவ மாணவிகள் கொந்தளிப்பில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், சில பேராசிரியர்களும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கொந்தளிப்பின் வெளிப்பாடாகவே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் பிரச்சினை வலுத்துவரும் நிலையில் விடுமுறை அறிவித்து வளாகத்தை மூட நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. ஏற்கெனவே தசராவுக்காக நாளை முதல் அக்டோபர் 2-ம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டத்தை மட்டுப்படுத்த இன்றே பல்கலைக்கழக வளாகத்தை மூட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
45 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago