ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பண்டிட் சஞ்சய் ஷர்மாவை கொலை செய்த பயங்கரவாதி இன்று(பிப். 28) சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தின் அச்சான் என்ற இடத்தில் வங்கி பாதுகாவலராக பணியாற்றிக்கொண்டிருந்த சஞ்சய் ஷர்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு டிஆர்எஃப் என்றழைக்கப்படும் தற்காப்புப் படை பொறுப்பேற்றது.
இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதியை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார். பண்டிட் சஞ்சய் ஷர்மாவை கொலை செய்த பயங்கரவாதி இவர் என்றும், இவரது பெயர் அகிப் முஸ்தக் பட் என்றும் காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. புல்வாமாவைச் சேர்ந்த அகிப் முஸ்தக் பட், முதலில் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதீன் எனும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பில் இருந்துள்ளார். அதன் பிறகு, இவர் டிஆர்எஃப் அமைப்பில் இணைந்துள்ளார்.
வங்கி பாதுகாவலராக பணியாற்றிய காஷ்மீர் பண்டிட்டான சஞ்சய் ஷர்மா கொல்லப்பட்ட இரண்டு தினங்களில், அவரது கொலைக்கு காரணமாக இருந்த பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago