புதுடெல்லி: மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் முறையை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக டாக்டர் பல்ராம் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் (பிஐஎல்) கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்றம் தனது 2014 உத்தரவில் கழிவுகளை அள்ளும் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களது மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் வழிமுறைகளை வழங்கியது. ஆனால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ஆர். பட், தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக 6 வாரங்களுக்குள் அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் 2014-ல் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவின்படி நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கு ஏப்ரல் 12-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago