Exit poll results: திரிபுரா, நாகாலாந்தில் மீண்டும் பாஜக கூட்டணி; மேகாலயாவில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: திரிபுரா மற்றும் நாகாலாந்தில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்றும், மேகாலயாவில் தொங்கு சட்டசபை நிலவ வாய்ப்புள்ளது என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

திரிபுராவில் கடந்த 16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற்றது. 3 மாநிலங்களிலும் நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் விவரம்:

திரிபுரா: இந்தியா டுடே - மை ஆக்ஸிஸ் இந்தியா நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக கூட்டணி 36 தொகுதிகள் முதல் 45 தொகுதிகள் வரை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சிபிஎம் - காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 11 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜன் கி பாத் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 29 - 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி 9 - 16 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் - இடிஜி கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 21-27 தொகுதிகளிலும், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி 18 - 24 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜீ நியூஸ்-மேட்ரிஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 29 - 36 தொகுதிகளிலும், காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி 13-21 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகாலாந்து: இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் NDPP - பாஜக கூட்டணி 38 முதல் 48 வரையிலான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்று இந்தியா டுடே - மை ஆக்ஸிஸ் இந்தியா நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு NPF கட்சி 3 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும், காங்கிரஸ் அதிகபட்சம் 2 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஜன் கி பாத் கருத்துக் கணிப்பில் NDPP - பாஜக கூட்டணி 35-45 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், NPF 6 - 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் - இடிஜி கருத்துக் கணிப்பில் NDPP-பாஜக கூட்டணி 39 - 49 தொகுதிகளிலும், NPF 4 - 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜீ நியூஸ் - மேட்ரிஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் NDPP - பாஜக கூட்டணி 35-43 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், NPF 2 - 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயா: 60 தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் NPP கட்சி 18 - 24 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே - மை ஆக்ஸிஸ் இந்தியா நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பாஜக 4 - 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6-12 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே - மை ஆக்ஸிஸ் இந்தியா கணித்துள்ளது.

ஜன் கி பாத் நடத்திய கருத்துக் கணிப்பில் NPP 11 - 16 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், பாஜக 3 - 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 - 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் - இடிஜி கருத்துக்கணிப்பில் NPP 18 - 26 தொகுதிகளிலும், பாஜக 3 - 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 - 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ நியூஸ் - மேட்ரிஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் NPP 21 - 26 தொகுதிகளிலும், பாஜக 6 - 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 - 6 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, மேகாலயாவை பொறுத்தவரை தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டு, சென்ற முறை போலவே தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமையலாம் என கருதப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்