மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் | தலா 59 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

ஷில்லாங் / கோஹிமா: வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி இருமாநிலங்களிலும் வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மேகாலயாவில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு: மேகாலயா மாநிலத்தில் மொத்தம் உள்ள60 தொகுதிகளில் 375 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால், 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அனைத்துதொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி)57, திரிணமூல் காங்கிரஸ் 56 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. களத்தில் 4 பெண் வேட்பாளர்கள் உள்ளனர். இவர்கள் 4 பேரில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றால் அவர் மேகாலயா சட்டப்பேரவையின் முதல் பெண் எம்எல்ஏவாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 21.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மேகாலயாவில் மொத்தம் உள்ள 3,419 வாக்குப் பதிவு மையங்களில்640 பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாகலாந்தில் போட்டியின்றி வென்ற பாஜக வேட்பாளர்: நாகாலாந்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 184 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பாஜக ஒரு இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. இதனால் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) - பாஜக கூட்டணி இணைந்து முறையே 40, 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதுபோல காங்கிரஸ் 23, நாகா மக்கள்முன்னணி 22, ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ் பாஸ்வான்) 15 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அங்கு 13.17 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

மார்ச் 2ல் வாக்கு எண்ணிக்கை: வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்தில் இன்று தேர்தல் நடைபெறும் நிலையில், திரிபுராவில் கடந்த 16-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேற்கண்ட 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு என அனைத்து தேர்தல்களிலும் பதிவாகும்வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்