புதுடெல்லி: இந்தியாவின் யுபிஐ நடைமுறை உலக நாடுகளை கவர்ந்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அதன்படி 98-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி வானொலியில் நேற்று காலை ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று 'மனதின் குரல்' வாயிலாக அழைப்பு விடுத்தேன். இதையேற்று பல்வேறு மாநிலங்களில் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு மீண்டும் ஊக்கம் அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளிலும் இந்திய பாரம்பரிய விளையாட்டுகள் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளை ஒற்றுமை தினமாக கொண்டாடி வருகிறோம். இதையொட்டி தேசபக்தி பாடல், தாலாட்டு பாடல், ரங்கோலி கோலம் தொடர்பான போட்டிகள் அறிவிக்கப்பட்டன. இதில் நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தாலாட்டு போட்டியில் கர்நாட காவின் சாம்ராஜ் நகரை சேர்ந்த மஞ்சுநாத் முதலிடத்தையும் அசாமின் காமரூபம் பகுதியை சேர்ந்த தினேஷ் 2-ம் பரிசையும் பெற்றுள்ளனர்.
ரங்கோலி கோலப் போட்டியில் பஞ்சாபை சேர்ந்த கமல் குமார், மகாராஷ்டிராவை சேர்ந்த சச்சின்நரேந்திரன், கோவாவை சேர்ந்தகுருதத் வாண்டேகர், புதுச்சேரியை சேர்ந்த மாலதி செல்வம் ஆகியோர் பரிசுகளை வென்றுள்ளனர். தேசப்பற்று பாடல் போட்டியில் ஆந்திராவின் விஜய் துர்கா பரிசினை வென்றுள்ளார்.
இ சஞ்சீவினி திட்டம்
டிஜிட்டல் இந்தியா திட்டங்களின் பலன்கள் நாட்டின் குக்கிராமங் களையும் சென்றடைந்து வரு கிறது. டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக 'இ சஞ்சீவினி' செயலி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தொலைதூர பகுதிகளைச் சேர்ந்த மக்கள், மிகச் சிறந்த மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்று காலத்தில் ‘இ சஞ்சீவினி' செயலி மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. இதன் மூலம் ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் பலன் அடைந்து வருகின்றனர். இந்த செயலி வாயிலாக மருத்துவ ஆலோசனை பெற்றவர்களின் எண்ணிக்கை 10 கோடியைதாண்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சிஅளிக்கிறது. இ சஞ்சீவினி வாயிலாக மக்களுக்கு சேவையாற்றும் அனைத்து மருத்து வர்களையும் பாராட்டுகிறேன். இந்த செயலியை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கிறேன்.
இந்தியாவின் யுபிஐ சக்தியைப்பற்றி அனைவரும் அறிந்திருப்போம். உலகின் பல்வேறு நாடுகள்,நமது யுபிஐ டிஜிட்டல் பணப் பரிமாற்ற நடைமுறையால் கவரப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் யுபிஐ- சிங்கப்பூரின் ‘பேநவ்’ இடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் இந்தியா, சிங்கப்பூர் மக்கள் மொபைல் போன் வாயிலாக எளிதாக டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.
இதுபோன்ற டிஜிட்டல் திட்டங் களால் மக்களின் வாழ்வியல் நடை முறை எளிதாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேற்குவங்கத்தின் ஹூக்ளி மாவட்டம், பான்ஸ் பேரியாவில் அண்மையில் கும்பமேளா நடைபெற்றது. இதில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கும்பமேளாமீண்டும் உயிர்ப் பிக்கப்பட்டி ருக்கிறது. இதனை மீண்டும் நடத்தியவர்களை மனதார வாழ்த்து கிறேன்.
ஹரியாணாவின் துல்ஹேடி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவர்களாக உள்ளனர். இந்த கிராம இளைஞர்கள் தினமும் அதிகாலை 4 மணிக்கு கிராமம் முழுவதும் துப்புரவு பணியை மேற்கொள்கின்றனர்.
ஒடிசாவின் கேந்திரபாடா பகுதியை சேர்ந்த கமலா, சுய உதவிக் குழுவை நடத்தி வருகிறார். இந்த குழுவை சேர்ந்த பெண்கள், குப்பையில் வீசப்பட்ட பால் கவர், பிளாஸ்டிக் பைகளை சேகரித்து, அவற்றை பயன்படுத்தி அழகிய கூடைகளை நெய்து வருகின்றனர். இவர்கள் குப்பைகளை அகற்றுவதோடு மட்டுமல்லாமல் அதில் இருந்து வருமானமும் ஈட்டுகின்றனர்.
தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றியடைய செய்ய பிளாஸ்டிக் பைகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக துணிப் பைகளை பயன்படுத்த அனைவரும் உறுதியேற்க வேண்டும். விரைவில் ஹோலி பண் டிகையை கொண்டாட உள்ளோம். இதையொட்டி முன்கூட்டியே மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பண் டிகை காலங்களில் உள்ளூர் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை ஏற்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago