உலகின் 3-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும்: அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆசிய பொருளாதார கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது:

அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக (தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது) உருவெடுக்கும். 2047-ம் ஆண்டில் அமெரிக்கா இன்று இருக்கும் நிலையை நாம் அடைவோம். 140 கோடி இந்திய மக்கள் ஒன்று சேர்ந்து நமது பொருளாதாரத்தை 30-40 லட்சம் கோடி டாலர்களாக மாற்றப் போகிறார்கள்.

பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை (ஆர்சிஇபி) வர்த்தக ஒப்பந்தம் பேரழிவை உருவாக்கும் கூட்டணி என்றும் அதில் இந்தியா இணை யாது என்றும் பிரதமர் மோடி கூறியபோது அந்த செய்தி எனக்கு இனிமையை தந்தது.

நீதிமன்ற மேல்முறையீடு, ஜனநாயகம் அல்லது சட்ட விதிமுறைகள் இல்லாமல் ஆர்சிஇபி-யில் சேருவதால் அது பேரழிவை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒரு சிலரைத் தவிர அந்த கூட்டாண்மையில் இணைய யாரும் சொன்னதாக நினை வில்லை. இவ்வாறு அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்