திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் இணையதளம் விரைவில் தொடங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில், தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறைகேட்கும் ‘டயல் யுவர் இஓ’ எனும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் பங்கேற்று கூறியதாவது:
இம்மாதம் 4-ம் தேதி முதல், தெலுங்கில் தேவஸ்தான இணையதளம் தொடங்கப்படுகிறது. அடுத்த மாதம் தமிழ், கன்னட மொழிகளில் இணையதள சேவை தொடங்கப்படும். ஆங்கிலம் தெரியாத பக்தர்களும் தங்கள் தாய்மொழியில் தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் பெறமுடியும். தங்கும் அறைகள் முன்பதிவு, லட்டு பிரசாதம் பதிவு, சேவை டிக்கெட்டுகள் போன்றவற்றை பெறமுடியும். காணிக்கைகளையும் ஆன்லைனில் செலுத்தலாம். இவ்வாறு அனில் குமார் சிங்கால் கூறினார்.
பின்னர் தொலைபேசி மூலம் 25 பக்தர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். சில ஆலோசனைகளையும் பக்தர்களிடமிருந்து பெற்றார். அப்போது பக்தர்கள் சிலர் வரும் 2018 தேவஸ்தான காலண்டர்களில் எழுத்துகளை சற்று பெரியதாக அச்சடிக்க கோரினர். மேலும் சிலர், தலைமுடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பக்தர்களிடமிருந்து ஊழியர்கள் கையூட்டு பெறுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago