டிஜிட்டல் பரவலாக்கம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி இருக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டிஜிட்டல் பரவலாக்கம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜி20 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு பெங்களூருவில் இன்று (பிப். 24) நடைபெற்று வருகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடக்க உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ''நிதி மற்றும் பொருளாதாரத்தில் உலகிற்கு தலைமை வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் நீங்கள். உலகம் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில் உங்களின் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் கரோனா போன்ற பெருந்தொற்று தற்போது ஏற்பட்டு உலக பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான பாதிப்புகளால் பல்வேறு நாடுகள் குறிப்பாக வளரும் நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகின் பல பகுதிகளில் புவி அரசியலில் பதற்றம் நிலவுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பருவநிலை மாற்றம் உள்பட சர்வதேச சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில் வளர்ச்சி திட்டங்களுக்கான வங்கிகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. உற்பத்தியாளர்களும், வாடிக்கையாளர்களும் எதிர்காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இதன் பிரதிபளிப்பு உலக பொருளாதார வளர்ச்சியோடு இணைவதை உங்களால் உறுதிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். உலகில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள குடிமக்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக உங்களின் ஆலோசனை இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அனைவரையும் இணைக்கும் செயல்திட்டங்களின் மூலம்தான் உலகின் நம்பிக்கையை அதிகரிக்க முடியும்.

நிதித்துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. அதேநேரத்தில் இது சில சவால்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பாதுகாப்பானதாகவும், நம்பிக்கையானதாகவும், செயல்திறன் மிக்கதாகவும் இருப்பதை இந்தியா உறுதிப்படுத்தி இருக்கிறது. அரசின் செயல்திறனை, அனைவருக்குமான வளர்ச்சியை இது மிகப் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக மக்களின் வாழ்க்கை எளிதாகி உள்ளது.

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கும் இந்த காலத்தில், டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கான இந்திய தொழில்நுட்பமான UPI தொழில்நுட்பத்தை ஜி20 நாடுகள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. வளர்ச்சிக்காக தொழில்நுட்பங்களை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வதில் இந்தியா ஒரு முன்மாதிரி நாடாக உள்ளது.'' இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்