கே.ஜி. பாலகிருஷ்ணன் பதவி விலக கோரிக்கை

மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியில் இருந்து கே.ஜி.பாலகிருஷ்ணன் விலகவேண்டும் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர். இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கும் அவர் கள் புகார் அனுப்பியுள்ளனர்.

நீதிபதி மார்கண்டேய கட்ஜூ வெளியிட்டுள்ள புகாரையடுத்து, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் ராஜாராமன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பல்வேறு புகார்களை மீறி, அசோக்குமாரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் நியமித் துள்ளார். இது அவரது நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது.

கட்ஜூ வெளியிட்டுள்ள புகாரை யடுத்து, தற்போது தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக உள்ள பாலகிருஷ்ணன் தாமாக முன்வந்து அப்பதவியில் இருந்து விலகியி ருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. எனவே, குடியரசுத் தலைவர் இந்த விஷயத் தில் தலையிட்டு, உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE