புதுடெல்லி: பள்ளியில் முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க குறைந்தபட்ச வயதை 6-ஆக நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதிய தேசிய கல்வி கொள்கைப்படி 3 முதல் 8 வயது குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி நிலைகள் 5 ஆண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிக்கு முந்தைய கல்வி (ப்ரீ ஸ்கூல்) 3 ஆண்டுகள் அடங்கும். அதன் பின் முதல் வகுப்பு மற்றும் 2 வகுப்பு கல்வி நிலை இடம் பெற்றுள்ளது.
இது குறித்து மத்திய கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறியதாவது: இந்த புதிய கல்வி கொள்கை ஆரம்ப கல்வி முதல் 2-ம் வகுப்பு வரை தடையற்ற கற்றலையும் குழந்தைகளின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. இதற்கு அங்கன்வாடி அல்லது அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் ஆரம்ப கல்வி மையங்களில் 3 ஆண்டு தரமான கல்வி கிடைப் பதை உறுதி செய்ய வேண்டும்.
புதிய கல்வி கொள்கைக்கு ஏற்ப 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago