ஆந்திராவில் ஆட்டோ மீது லாரி மோதி 5 பெண்கள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

மன்யம்: ஆந்திர மாநிலம், மன்யம் மாவட்டம், கூனேரு - சொள்ளபதம் நெடுஞ்சாலையில், நேற்று மதியம் பார்வதி புரத்திலிருந்து ராய்காட் பகுதிக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்குநேர் மோதியது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 4 பெண்கள் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் கோமராடா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். இவர்கள் அனைவரும் தும்மலவலசா எனும் கிராமத்தில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் ஊர் திரும்பும் போது விபத்தில் சிக்கினர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்