100 மோடி, அமித்ஷா வந்தாலும் மத்தியில் அடுத்தாண்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் - மல்லிகார்ஜுன கார்கே உறுதி

By செய்திப்பிரிவு

கொஹிமா: நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் வரும் திங்கட்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது. நாகாலாந்தில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: ‘என்னால் மட்டுமே நாட்டை எதிர்கொள்ள முடியும். என்னை யாரும் தொட முடியாது’ என பிரதமர் மோடி கூறி வருகிறார். எந்த ஜனநாயகவாதியும் இதுபோல் கூறுவதில்லை.

மத்தியில் அடுத்தாண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமையும். இதற்காக இதர கட்சிகளுடன் நாங்கள் பேசி வருகிறோம். இல்லையென்றால் ஜனநாயகமும், அரசியல் சாசனமும் மறைந்து போகும். அதனால்தான் ஒவ்வொரு கட்சி யையும் நாங்கள் அடிக்கடி அழைத்து பேசுகிறாம்.

அடுத்த தேர்தலில், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது. மற்ற கட்சிகளுடன் இணைந்து எங்களுக்கு பெரும்பான்மை கிடைக்கும். 100 மோடி, அமித்ஷா வந்தாலும் இதை தடுக்க முடியாது. நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE