காந்திதாம் (குஜராத்): கேங்ஸ்டர் நெட்வொர்க் வழக்குகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் உள்ள 70 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) செவ்வாய்க்கிழமை (பிப்.21) சோதனை நடத்தினர். குஜராத்தின் காந்திதாமில் உள்ள கேங்க்ஸ்டர் பிஷ்னோயின் நெருங்கிய உதவியாளர் குல்விந்தர் இருக்கும் பகுதிகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
குல்விந்தர், நீண்ட நாட்களாக பிஷ்னோய் உடன் தொடர்பில் இருந்தவர். அவர் மீது பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக வழக்கு உள்ளது. குல்விந்தருக்கு சர்வதேச போதைப் பொருள் கூட்டமைப்புடன் தொடர்பு இருக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கேங்ஸ்டர் மற்றும் அவைகளின் கிரிமினல் கூட்டமைப்புகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை தொடர்ந்த வழக்குகள் தொடர்பாக தற்போதைய சோதனை நடந்து வருகிறது. கேங்ஸ்டர் நெட்வொர்க் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை நடத்தும் நான்காவது சுற்று சோதனை இதுவாகும்.
இந்த சோதனை, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, சண்டிகர், உத்தர பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் நடைபெற்று வருகின்றது.
» தெலங்கானாவில் பயங்கரம்: தெருநாய்கள் கடித்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு
» ஒடிசாவில் தொலைதூர கிராமத்தில் உள்ள மாற்றுத் திறனாளிக்கு ‘ட்ரோன்’ மூலம் ஓய்வூதியம்
பஞ்சாப்பில் 30 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஹரியானாவில் யமுனா நகரில் உள்ள முண்டா மஜ்ரா பகுதியில் என்ஐஏவினர் சோதனை நடத்தினர். ஆசாத் நகரில் நடந்த சோதனையில் உள்ளூர் போலீசாரும் என்ஐஏவுடன் இணைந்து சோதனை நடத்தினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago