நிலைக்குழு பரிசீலனைக்கு எஸ்சி, எஸ்டி சட்டதிருத்த மசோதா

எஸ்.சி., எஸ்.டி. சட்ட திருத்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ்-வைதிக் சந்திப்பு விவகாரத் தால் மக்களவையில் வியாழக் கிழமையும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்போது வன் கொடுமை தடுப்பு (எஸ்.சி., எஸ்.டி.) சட்ட திருத்த மசோதா அவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

இதற்கு மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எதிர்ப்பு தெரிவித்தார். நாட்டின் 23 சதவீத எஸ்.சி., எஸ்.டி. மக்கள் இந்த மசோதா குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்டறிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் பேசியபோது, அவையில் கூச்சல், குழப்பம் நிலவியபோது சட்ட மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்பியது தவறான நடவடிக்கை என்று குற்றம் சாட்டினார். இந்த சட்டமசோதா விவகாரத்தால் அவையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE