புதுடெல்லி: பிபிசியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை முடிவடைந்தது.
பிரிட்டனைச் சேர்ந்த செய்தி நிறுவனமான பிபிசியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை (ஐ.டி.) அதிகாரிகள் கடந்த 14-ம் தேதி சோதனையை தொடங்கினர். இந்தியாவின் வருமான வரிச் சட்டத்தின் ‘டிரான்ஸ்பர் பிரைசிங்’ விதிமுறையை பிபிசி இந்தியா மீறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விளக்கம் கேட்டபோதும் உரிய பதில் அளிக்காததால் இந்த சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக கடந்த 2012-ம்ஆண்டு முதல் கணக்கு வழக்குகள், நிதி பரிவர்த்தனைகளை ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனால் பிபிசியின் டெல்லி அலுவலகத்தைச் சேர்ந்த 10 உயர் அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக வீட்டுக்குச் செல்லாமல் அங்கேயே இருந்தனர். இந்த சோதனையின்போது, கணக்கு வழக்கு தொடர்பாக கணினிகளில் இருந்த தகவல்கள் மற்றும் கோப்புகளில் இருந்த ஆவணங்களை ஐ.டி.அதிகாரிகள் நகல் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இரவு பகலாக கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனை நேற்றுடன் முடிவடைந்தது.
கடந்த 2002-ல் நடந்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப் படத்தை பிபிசி சமீபத்தில் வெளியிட்டது. அதில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிபிசி அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago