பிபிசி டெல்லி, மும்பை அலுவலகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக ஐ.டி. அதிகாரிகள் சோதனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிபிசியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் சோதனை நடத்தினர்.

பிரிட்டனைச் சேர்ந்த செய்தி நிறுவனமான பிபிசியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை (ஐ.டி.) அதிகாரிகள் கடந்த 14-ம் தேதி சோதனையை தொடங்கினர். இந்தியாவின் வருமான வரிச் சட்டத்தின் ‘டிரான்ஸ்பர் பிரைசிங்’ விதிமுறையை பிபிசி இந்தியா மீறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விளக்கம் கேட்டபோதும் உரிய பதில் அளிக்காததால் இந்த சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கடந்த 2012-ம்ஆண்டு முதல் கணக்கு வழக்குகள், நிதி பரிவர்த்தனைகளை ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இரவு பகலாக கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனை 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் பிபிசியின் டெல்லி அலுவலகத்தைச் சேர்ந்த 10 உயர் அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக வீட்டுக்குச் செல்லாமல் அங்கேயே உள்ளனர்.

இந்த சோதனையின்போது, கணக்கு வழக்கு தொடர்பாக கணினிகளில் இருந்ததகவல்கள் மற்றும் கோப்புகளில் இருந்த ஆவணங்களை ஐ.டி.அதிகாரிகள் நகல் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2002-ல் நடந்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப் படத்தை பிபிசி சமீபத்தில் வெளியிட்டது. அதில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிபிசி அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்