மகாராஷ்டிராவில் நிலத்துக்கு அடியில் கேட்ட மர்ம ஒலி: பூகம்ப வதந்தியால் பொதுமக்கள் பீதி

By செய்திப்பிரிவு

லத்தூர்: மகாராஷ்டிரா மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள லத்தூரில் பூமிக்கு அடியில் மர்மமான ஒலிகள் கேட்டுள்ளன. ஆனால் நில அதிர்வு எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மர்ம ஒலியானது புதன்கிழமை காலை 10.30 முதல் 10.45 மணிக்கு இடையில், விவேகாந்தா சவுக் அருகில் கேட்டுள்ளது. இதனால் பூகம்பம் வந்துவிட்டதாக பரவிய வதந்திகளால் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் சிலர் உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறை, லாத்தூர் நிலநடுக்க ஆய்வு மையம் மற்றும் மாவட்டத்தின் அவுரத் ஷாஜினி மற்றும் ஆஷிவ் ஆகியவற்றிடமிருந்து தகவல்கள் பெற்றது. ஆனாலும் நிலநடுக்கம் ஏதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரி, சாபேப் உஸ்மானி கூறுகையில்,"மாரத்வாடா பகுதியில் அவ்வப்போது சில மர்ம ஒலிகள் பதிவாகியுள்ளன என்று தெரிவித்தார். முன்னதாக, இந்தாண்டு பிப்.4ம் தேதி மாவட்டத்தின் நிலங்கா தாலுகாவிலுள்ள நித்தூர் தங்கவாடி பகுதியில் இதுபோன்ற ஒலிகள் கேட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், லத்தூர் மாவட்டத்தின் ஹசோரி, கில்லாரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்ற ஒலிகள் கேட்டுள்ளன.மேலும் கில்லாரி கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE