புதுடெல்லி: கடந்த 2021-22-ம் நிதியாண்டில் பாஜக ரூ.614 கோடியும், காங்கிரஸ் ரூ.95 கோடியும் நன்கொடையாகப் பெற்றுள்ளன.
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு (ஏடிஆர்) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு கடந்த 2021-22-ம் நிதியாண்டில் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2021-22-ம் நிதியாண்டில் நாடு முழுவதும் தேசிய கட்சிகள் ரூ.20,000-க்கு மேல் பெற்ற நன்கொடை விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டு உள்ளன. இதன்படி பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, திரிணமூல் காங்கிரஸ்ஆகிய தேசிய கட்சிகள் ஒட்டுமொத்தமாக ரூ.780.77 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளன.
இதில் அதிகபட்சமாக மத்தியில் ஆளும் பாஜக ரூ.614.62 கோடியை நன்கொடையாக பெற்றிருக்கிறது. அந்த கட்சிக்கு 4,957 நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன.கடந்த 2020-21-ம் நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.477.54 கோடி நன்கொடை கிடைத்தது. தற்போது அந்த கட்சிக்கு 28.71 சதவீதம் நன்கொடை அதிகரித்திருக்கிறது.
» உறவினர்களை கட்சிக்குள் இழுக்க பாஜக சதி - முதல்வர் மம்தா பகிரங்க குற்றச்சாட்டு
» திருமணமான 3-வது நாளே புதுமண தம்பதி சாலை விபத்தில் உயிரிழப்பு
கடந்த 2021-22-ம் நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.95.45 கோடி நன்கொடை கிடைத்திருக்கிறது. அதற்கு முந்தைய நிதியாண்டில் அந்த கட்சி ரூ.74.52 கோடி நன்கொடை வசூலித்தது. தற்போது 28.09 சதவீதம் அளவுக்கு நன்கொடை அதிகரித்திருக்கிறது.
தேசியவாத காங்கிரஸுக்கு ரூ.57.9 கோடி, மார்க்சிஸ்ட் கட்சிக்குரூ.10 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.1.94 கோடி, திரிணமூல் காங்கிரஸுக்கு ரூ.43 லட்சம், தேசிய மக்கள் கட்சிக்கு ரூ.35 லட்சம் நன்கொடை கிடைத்திருக்கிறது.
அதிக நிதி வழங்கிய மாநிலம்: தேசிய கட்சிகளுக்கு அதிக நிதி வழங்கிய மாநிலங்களில் டெல்லி யூனியன் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கிருந்து ரூ.395.84 கோடி நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது.
இதில் மிக அதிகபட்சமாக பாஜகவுக்கு ரூ.366.57 கோடி கிடைத்திருக்கிறது. டெல்லியில் இருந்து காங்கிரஸ் ரூ.27.51 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.
டெல்லியை அடுத்து மகாராஷ்டிராவில் இருந்து தேசிய கட்சிகளுக்கு ரூ.105.35 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவுக்கு ரூ.29.59 கோடி, காங்கிரஸுக்கு ரூ.19.53 கோடி, தேசியவாத காங்கிரஸுக்கு ரூ.55.47 கோடி கிடைத்திருக்கிறது.
குஜராத்தில் இருந்து ரூ.44.95 கோடி, அசாமில் இருந்து ரூ.23கோடி, கர்நாடகாவில் இருந்து ரூ.22.97 கோடி தேசிய கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நன்கொடை: கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்பில் ரூ.625.88 கோடியும் தனிநபர்கள் சார்பில் ரூ.153.32 கோடியும் தேசிய கட்சிகளுக்குநன்கொடையாக வழங்கப்பட்டி ருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்பில் பாஜகவுக்கு மட்டும் ரூ.548.80 கோடி நன்கொடை கிடைத்திருக்கிறது.
இவ்வாறு ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago