6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு ‘கோவிட்-19’ பரிசோதனை கட்டாயமில்லை - மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சீனா, ஹாங்காங் உட்பட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ‘கோவிட்-19’ பரிசோதனை இனிமேல் கட்டாயமில்லை என்று நேற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், சீனா உட்பட சில நாடுகளில் மீண்டும் தொற்று அதிகரித்தது. மேலும் உருமாறிய கரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியது. இதையடுத்து இந்தியாவில் உருமாறிய கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சீனா, ஹாங்காங், கொரியா, தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள், கட்டாயமாக ‘கோவிட்-19’ பரிசோதனையை 72 மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும். அதற்கான ஆவணத்தை ‘ஏர் சுவிதா’ என்ற இந்திய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றுமத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கட்டுப்பாடு விதித்தது.

வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் மேற்கூறிய 6 நாடுகள் வழியாக இந்தியா வந்தாலும் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி ஆறு நாடுகளில்இருந்து வரும் பயணிகளுக்கு இந்திய விமான நிலையங்களில் கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் கரோனா பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் தனிமைப் படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண், மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சர்வதேச விமான பயணிகளின் இந்திய வருகை தொடர்பாக அவ்வப்போது கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது கரோனாபரவல் கணிசமாக குறைந்துள்ள தால், சீனா உட்பட 6 நாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டாய கோவிட்-19 பரிசோதனைநீக்கப்படுகிறது. எனினும். இந்தியாவரும் வெளிநாட்டு பயணிகளில்ரேண்டமாக 2 சதவீதம் பேருக்குநடத்தப்படும் கரோனா பரிசோதனை தொடரும்.

இவ்வாறு சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரி வித்துள்ளார்.

124 பேருக்கு கரோனா தொற்று: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 124 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 1,843 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE