ராஜஸ்தான் வங்கி லாக்கரில் பெண் வாடிக்கையாளரின் ரூ.2 லட்சத்தை நாசமாக்கிய கரையான்கள்

By செய்திப்பிரிவு

உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரின் காலாஜி கோராஜி பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை உள்ளது. இதில் உள்ள 265-ம் எண் கொண்ட பாதுகாப்பு பெட்டக லாக்கரில் சுனிதா மேத்தா என்பவர் 2.15 லட்சம் ரூபாய் நோட்டுகள் மற்றும் சில சொத்து ஆவணங்களை வைத்திருந்துள்ளார்.

சமீபத்தில் வங்கிக்கு சென்ற சுனிதா, பணத்தை எடுப் பதற்காக தனது லாக்கரை திறந்துள்ளார். ஆனால், அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் சொத்து ஆவணங்களை கரையான்கள் அரித்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போராட்டம்: இதுகுறித்து வங்கி மேலாளரி டம் சுனிதா புகார் செய்துள்ளார். இதையடுத்து வங்கி நிர்வாகத்தினர் லாக்கர்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்துள்ளனர். மேலும் லாக்கர் சேவை பெறும் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வங்கிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள னர். அதன்படி வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள், அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர். பின்னர் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE