தெற்காசியாவின் நுழைவு வாயில் திரிபுரா - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

தலாய்: திரிபுரா மாநில சட்டப்பேரவைக்கு 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கியுள்ளதால் 60 இடங்கள் கொண்ட திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இறுதி கட்டத் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி நேற்று திரிபுரா வருகை தந்தார். தலாய் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியைத் தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகி றது. பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சிதான் வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் கொண்டு வந்தது. மாநிலத்தை வன்முறை, மிரட்டல், பயம் ஆகியவற்றில் இருந்து திரிபுரா மாநிலத்தை பாஜகதான் காப்பாற்றி இருக்கிறது.

பல ஆண்டுகளாக திரிபுராவில் வளர்ச்சிக்கு இடையூறாக கம்யூ னிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் இருந்து வந்தன. பாஜகதான் வளர்ச்சியை கொண்டு வந்தது. வன்முறையை ஒழித்தது. நெடுஞ்சாலை, ரயில்வே, இன்டர்நெட், விமான நிலையங்கள் என்று அனைத்துவிதமான வளர்ச்சி களையும் பாஜக திரிபுராவில் கொண்டு வந்துள்ளது. தற்போது தெற்காசியாவின் நுழைவுவாயிலாக (கேட்வே ஆஃப் சவுத் ஏஷியா) திரிபுரா மாநிலம் வளர்ச்சி பெற்றுள்ளது. பழங்குடியின மக்களின் முயற்சிகளை அங்கீகரிப் பதன் மூலம் தேசத்தை கட்டியெழுப்புவதில் பழங்குடியின மக்களின் பங்களிப்பை வெளிப்படுத்த பாஜக அரசு பாடுபடுகிறது.

திரிபுராவில் பாஜக ஆட்சி அமைந்தால் நெடுஞ்சாலைகள், இணையதள சேவை, ரயில்வே, விமானச் சேவைகள் மேம்படுத்தப் படும் என அறிவித்தோம். அதன்படி இன்று செய்து முடித்துள்ளோம். இணையதள சேவைக்காக திரிபுரா கிராமங்களில் கண்ணாடி இழைக் கேபிள்களை பதிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கிராமங்களை இணைக்க
5 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன. அகர்தலாவில் விமான நிலையம் கட்டப்பட்டுள் ளது. கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் கிராமங்களுக்கு 4ஜி இணையதள சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் திரிபுரா, உலக அரங்கில் இடம் பெற்றுள்ளது. திரிபுரா மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் முனைப்பில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.

முன்பெல்லாம் திரிபுரா மாநில போலீஸ் நிலையங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைப்பற்றி வைத்திருந்தனர். பாஜக ஆட்சி வந்தபிறகு, சட்டம் தனது ஆட்சியைச் செய்கிறது. மக்களுக்கு சுய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளால் ஏழைகளை எந்த பிரச்சினையிலிருந்தும் விடுவிக்க முடியாது. பாஜக உங்களின் வேலைக்காரனாக, உங்களின் உண்மையான தோழனாக... உங்களின் ஒவ்வொரு கவலையையும் போக்க இரவும் பகலும் கடுமையாக உழைத்து வருகிறது. எனவே, மீண்டும் இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE