12 ஆண்டுகளில் 16 லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் குடியுரிமையை துறந்துவிட்டார்கள்: மத்திய அரசு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 12 ஆண்டுகளில் 16 லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியக் குடியுரிமையை துறந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்தார். அப்போது, ''கடந்த 2011ல் இருந்து இதுவரை 16 லட்சத்து 63 ஆயிரத்து 440 பேர் தங்கள் இந்தியக் குடியுரிமையை துறந்துவிட்டனர். குறைந்தபட்சமாக கடந்த 2020-ல் 85,256 பேரும், அதிகபட்சமாக கடந்த ஆண்டு 2 லட்சத்து 25,620 பேரும் குடியுரிமையை துறந்துவிட்டனர்.

2011-ல் 1,22,819 பேரும், 2012-ல்1,20,923 பேரும், 2013-ல் 1,31,405 பேரும், 2014-ல் 1,29,328 பேரும் குடியுரிமையை துறந்துள்ளனர். 2015-ல் 1,31,489 பேரும், 2016-ல் 1,41,603 பேரும், 2017-ல் 1,33,049 பேரும் குடியுரிமையை வேண்டாம் என்று துறந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை 2018-ல் 1,34,561 ஆகவும், 2019-ல் 1,44,017 ஆகவும், 2020-ல் 85,256 ஆகவும், 2021-ல் 1,63,370 ஆகவும், 2022ல் 2,25,620 ஆகவும் இருந்துள்ளது. இவர்கள் 135 வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அங்கு குடியுரிமை பெற்றுக்கொண்டதை அடுத்து அவர்கள் தங்களின் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்'' என ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE