அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இரண்டு நாட்கள் முன்னதாகவே பருவ மழை தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக இந்திய வானியல் ஆய்வு மைய தலைமை இயக்குநர் கே.ஜே. ரமேஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அவர், ''மே 17-ம் தேதி தெற்கு அந்தமானில் பருவமழை தொடங்கலாம். அப்போது அங்கே மேகங்கள் மற்றும் மழைக் காற்றின் சுழற்சி உருவாகும். அது தொடர்ந்தால், பருவமழை விரைவில் பொழியத் தொடங்கும். இதைக்கொண்டு அது எவ்வள்வு விரைவில் கேரளாவை அடையும் என்று கூறுவது கடினம். பொதுவாக 2 வாரங்களில் இந்த அமைப்பு கேரளாவை அடையலாம்” என்று தெரிவித்துள்ளார்.
எல் நினோ அச்சுறுத்தல்
பொதுவாக கேரளாவில் ஜூன் 1-ல் பருவமழை தொடங்கும். எல் நினோ விளைவு நீங்கிவிட்டது என்று தி இந்து (ஆங்கிலம்) செய்தி வெளியிட்டது. ஆனாலும் இதனால் மழை அளவு அதிகரிக்கும் என்று கூறுவதற்கில்லை.
இதுகுறித்து புனே வானியரல் மைய தலைமை கணிப்பாளர் பய் கூறும்போது, ''எல் நினோ அதிக மழைப்பொழிவை அளிக்குமா என்பது தெரியவில்லை. ஆச்சர்யப்படுத்தும் விதமாக பருவமழையை வற்றச் செய்யும், வானிலை ஒழுங்கின்மை (meteorological anomaly) குறைந்துள்ளது. இதனால் நிலைமை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago