புதுடெல்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் (ஓபிசி) ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மேல் உடையவர்கள் கிரீமிலேயர் பிரிவில் வருகின்றனர். அவர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் இடஓதுக்கீடு சலுகைகள் வழங்கப்படாது.
இதனால், கிரீமிலேயர் வரம்பை உயர்த்த வேண்டும் என்று பிற்படுத்தப்பட்ட தரப்பினர் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் கிரீமிலேயர் வரம்பை ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்த திட்டம் உள்ளதா என்று காங்கிரஸ் உறுப்பினர் தீன் குரியகோஸ் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் வீரேந்திர குமார் அளித்த பதிலில், “தற்போதுள்ள ரூ.8 லட்சம் வரம்பே போதுமானது என்று மத்திய அரசு கருதுகிறது. இதனால், இந்த வரம்பை உயர்த்தும் திட்டம் இல்லை” என்று தெரிவித்தார்.
1990-ம் ஆண்டு, பிற்படுத்தப் பட்டோருக்கான இடஓதுக்கீடு தொடர்பான மண்டல் ஆணையத்தின் பரிந்துரை நடைமுறைப் படுத்தப்பட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்ட நிலையில், 1993-ம் ஆண்டு இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது கிரீமிலே யருக்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. 2004-ல்ரூ.2.5 லட்சமாகவும், 2008-ல் ரூ.4.5லட்சமாகவும், 2013-ல் ரூ.6 லட்சமாகவும் 2017-ல் ரூ.8 லட்சமாகவும் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப் பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக் கிரீமிலேயர் வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago