நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ரூ.30.71 கோடி பறிமுதல்

By செய்திப்பிரிவு

கொஹிமா: நாகாலாந்து சட்டப்பேரவைக்கு வரும் 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று நிறைவு பெற்றது. வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்படுகின்றன. மனுக்களை வாபஸ் பெற 10-ம் தேதி கடைசி நாளாகும்.

இந்நிலையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலையொட்டி மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு துறை அதிகாரிகளை கொண்ட குழுவினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ரொக்கம், உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபான பாட்டில்கள், போதைப் பொருட்கள், வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட பொருட் கள் என பலவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பிப்ரவரி 6-ம் தேதி நிலவரப்படி பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பிற பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.30.71 கோடி ஆகும்.

இவ்வாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE