பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 5 பேருக்கு ஜாமீன்

By ஏஎன்ஐ

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 5 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உ.பி. மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ல் பாபர் மசூதி இடிக் கப்பட்டது. இந்த சம்பவம் தொடர் பாக முன்னாள் எம்.பி. வேதாந்தி, விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சம்பத் ராய், பி.எல்.சர்மா, மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் மற்றும் தர்மதாஸ் மீது வழக்குத் தொடரப் பட்டிருந்தது. இவர்கள் 5 பேரையும் நேற்று நேரில் ஆஜராகும்படி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன் அடிப்படையில் அவர்கள் 5 பேரும் நேற்று ஆஜராகினர். அப்போது தங்களுக்கு இவ்வழக்கில் இருந்து ஜாமீன் வழங்கும்படி மனுத் தாக்கல் செய்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள உத்தரவாத பத்திரத்தில் அவர்களிடம் கையெழுத்து பெற்று ஜாமீன் வழங்கினார். மேலும் இவ்வழக்கின் அடுத்த விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ மேல்முறையீடு செய்வதற்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அத்துடன் பாஜக தலைவர்கள் எல்.கே.அத் வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங் ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட கிரிமினல் சதி குற்றச்சாட்டையும் நீக்க வேண்டாம் என தெரிவித்திருந்தது. மேலும் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கை தினந்தோறும் விசாரித்து 2 ஆண்டு களுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கு விசார ணையை நேற்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

37 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்