அதானி விவகாரத்தில் விசாரணை கோரி நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த வாரம் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனப் பங்குகளின் விலை கடுமையாக சரிந்தது.

அதானி விவகாரம் நாடாளுமன்றத்திலும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த வாரம் பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு வியாழக்கிழமை நாடாளுமன்றம் கூடியபோது இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி இதுகுறித்து பதிலளிக்க வேண்டுமெனக் கோரி அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ச்சியாக ஒத்தவைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அதானி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வுடன் எதிர்க்கட்சிகள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டன. இதில், திமுக, என்சிபி, பிஆர்எஸ், ஜேடியு, சமாஜ்வாதி, சிபிஎம், சிபிஐ, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.

இந்தக் கூட்டத்தில் எடுத்த முடிவுகளின் அடிப்படையில் அதானி விவகாரத்தில் நாடாளு மன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றத்தின் மேற்பார் வையில் இது குறித்து விசா ரணை நடத்த வேண்டும் என கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.இதையடுத்து அவை நடவடிக்கைகள் அனைத்தும் நேற்றும் முடங்கின.

எதிர்க்கட்சிகள் அனைத்தும்ஒன்றிணைந்து நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் காந்தி சிலை முன்பாக இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இதனிடையே, அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள எல்ஐசி, எஸ்பிஐ-க்கு எதிர்ப்பு தெரிவித்து அவற்றின் அலுவலகங் கள் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்