புதுடெல்லி: அதானி குழும விவகாரம் குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இன்றும் (திங்கள்கிழமை) அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜன.31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற வேண்டும்.
இந்த நிலையில், அதானி குழும முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால் கடந்த இரண்டு அலுவல் நாட்களாக நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று (திங்கள் கிழமை) நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடியது. எல்ஐசி நிறுனம் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தது மற்றும் அரசு வங்கிகள் அதானி குழுமத்திற்கு வழங்கியுள்ள கடன்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இன்றும் நாடாளுன்றத்தில் அமளியில் ஈடுபட்டன. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதிகாக்க வலியுறுத்தினார். ஆனாலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.
» வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்கு இளைஞர்களின் எதிர்பார்ப்புதான் காரணம்: மோகன் பாகவத்
» உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக 5 பேரை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்: மத்திய அரசு
அதே போல் மாநிலங்களையிலும் எதிர்க்கட்சியினர் அவையில் அதானி குழும விவகாரங்களை மட்டுமே முதலில் விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுப்பட்டனர். அதற்கு மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அலுவல் திட்டப்படி முதலில் செயல்படுவோம். அதன் பின்னர் மற்ற விவகாரங்களை விவாதிக்கலாம் என்று தெரிவித்தார். ஆனாலும் அதானி குழும விவகாரம் குறித்து மட்டுமே முதலில் விவாதிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியதால் மாநிலங்களவையும் மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்: முன்னதாக, இன்று நாடாளுமன்றம் கூடும் முன்பாக, அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகையில், இந்தவிவகாரம் பற்றி விவாதிக்கப்படக்கூடாது என்று அரசு விரும்புகிறது. அவர்கள் அதனை எப்படியாவது தவிர்க்க விரும்புகிறார்கள். எங்கள் நோட்டீஸ் மீது நாங்கள் விவாதம் நடத்தக்கோருகிறோம். விரிவான விவாதத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகிறோம். குடியரசுத் தலைவர் உரை மீதும் விவாதம் நடத்தத் தயார் அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனால் அதானி குழும பிரச்சினைக்கு பிரதமர் பதில் அளிப்பதே முன்னுரிமையானது" என்றார். அதற்கு முன்பாக காலை 9.30 மணிக்கு எதிர்க்கட்சி எம்.பி.,களின் கூட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. இந்தக்கூட்டம் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago