கிராம வரியை செலுத்தினால் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு - மகாராஷ்டிரா கிராம நிர்வாகம் திட்டம்

By செய்திப்பிரிவு

லத்தூர்: மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் பஞ்சஞ்சோலி. இந்தக் கிராமத்தில் 5,947 பேர் வசிக்கின்றனர். இதில் 930 பேர் வரி செலுத்துபவர்கள். இந்நிலையில் இவர்களிடம் பஞ்சாயத்து வரியை முழுமையாக வசூலிக்க புதிய திட்டத்தை கிராம நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.

கிராமத் தலைவர், கீதாஞ்சலி ஹனுமந்தே கடந்த வெள்ளிக் கிழமை கிராம சபை கூட்டத்தைக் கூட்டினார். கிராம நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில், அதன் முன்னாள் தலைவர் ஸ்ரீகாந்த் சலுங்கே வரி வருவாயை பெருக்குவதற்கான திட்டம் ஒன்றைமுன்மொழிந்தார்.

கிராம நிர்வாகத்தால் விதிக்கப் படும் வரிகளை 100 சதவீதம் செலுத்துபவர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டை இலவசமாக வழங்க லாம் என்று அவர் கூறினார். இந்தத் திட்டத்துக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரி வித்தனர். அதையடுத்து இத்திட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து காந்த் சலுங்கே செய்தியாளர்களிடம் கூறுகையில், “வரி வருவாயை அதிகரித்து கிராமத்தை மேம் படுத்துவதற்காக இந்தத் திட் டத்தை அறிவித்துள்ளோம். இது போல் வேறு சில திட்டங்களும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

8 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

11 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்